சித்திரை என்றாலே திருவிழா மாதம்... பள்ளி, பரிட்சை என்று நொந்துபோன சிறார்களுக்கு அது உயிர் புதுப்பிக்கும் ஆக்சிஜன் என்றால் மிகச் சரியாக இருக்கும்.

அக்காலத்தில் மழை பெய்து வேளாண்மை, அறுவடை செய்து மற்ற மாதங்கள் ஓடும். சித்திரை வெயிலில் வேலை செய்ய முடியா காரணத்தால் அது முழுதும் கொண்டாட்டங்கள், பண்டிகைகள் என்று கழி(ளி)த்தனர் நம் முன்னோர்.

அது 15 நாள் கொண்டாட்டம்... பூச்சொரிதல் தொடங்கி முளைப்பாரி திருநாள் வரை பாடு அமர்க்களப்படும். சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் ஆண்டுதோறும் ஊருக்குச் செல்வதே இதுபோன்ற திருவிழாக்களுக்குத்தான்.

சித்திரை மாத ஞாயிறுகளில் பூச்சொரிந்து, அடுத்த எட்டாம் நாள் காப்பு கட்டி, நடுவில் உள்ள ஒரு வாரம் ஒவ்வொரு தெரு மண்டகப்படி நடத்தி கூழ் ஊற்றும் செய்முறை செய்து, அடுத்த ஞாயிறு அன்று திருவிழா நடைபெறும்.

திருவிழா நாளன்று காலை முதலே பால் குடம், பல விதமான காவடி ஆட்டங்கள், இரவில் பல்லக்குடன் ஏதேனும் கிராமிய நடனங்கள் முதலியவை விமரிசையாக தூள் பறக்கும்.

மறுநாள் திங்களன்று தேரோட்டத்துடன் கட்டிய காப்பினை அறுத்து, அடுத்த நாள் முளைப்பாரி திருநாள் நடக்கும். இத்துடன் திருவிழா முடிவடையும்.

எங்களூர் திருவிழாவின் சிறு சிறு நினைவுகள், இதோ புகைப்படங்களாய்....

தேர் திருவிழா

தார, தப்பட்டை கிழிய ...
_DSC0617

பாரளந்த தேரு...
_DSC0873

_DSC0540

_DSC0597

சரி செல்ஃபி இல்லாம எப்டி...
_DSC0794

உன்ன யார் தலைவா தப்பாட்டம்னு சொன்னது... நீதான் சரியான ஆட்டம்...
_DSC0894

_DSC0590

போடு ஆட்டம் போடு...
_DSC0829

பால் குடம்...
_DSC0542

காவடியாம் காவடி... மயில் காவடி...
_DSC0633

_DSC0599

_DSC0617

_DSC0681

நாங்களும் தேரு இழுப்போம்ல...
_DSC0690

குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா...
_DSC0910

_DSC0720

இது எங்க ஏரியா...
_DSC0745

இவன் யாரென்று தெரிகிறதா... தீயென்று புரிகிறதா...
_DSC0744

நல்ல ஃபோட்டோவா எடுங்க...DP மாத்தனும்....... இந்த போஸ் ஒகேவா...
_DSC0756

எங்க ஊரு காக்கும் மாரியம்மா...
_DSC0953

நாடு செழிக்க வேணும்... நல்ல மழை பெய்ய வேணும்...
_DSC0652

_DSC0627

_DSC0642-2

_DSC0827

தேர் துளிகள்... மொட்டை வெயிலில் பட்டையை கிளப்பும் பறை ஆட்டம்...காணொளி...

உயர்தர படத்தை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் Download Album
content courtesy - Pratheba Chandramohan